வடமேல் மாகாணத்தினுள் செயற்படுத்தப்படுகின்ற வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவையினை ஒருங்கிணைப்பு செய்து முறைப்படுத்துவதற்காக வடமேல் மாகாண சபையின் 1995 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க வடமேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து சேவை சாசனத்தின் கீழ் வடமேல் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார   நிறுவப்பட்டுள்ளது.  இவ் அமைச்சினால் சென்ற வருடத்தினுள் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுள்ளது.

வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் வழங்கப்படுகின்ற சேவைகள்.

· வடமேல் மாகாணத்தினுள் பரவலாக காணப்படும் 306 வீதிகளில் 1384 பேரூந்துகள் போக்குவரத்து செய்து பொது மக்களின் போக்குவரத்து தேவையினை பூர்த்தி செய்தல்.

· குறிப்பிட்ட கட்டணத்தில் அரைவாசி மாத்திரம் அறவிட்டு சிசு செரிய பாடசாலை மாணவர்களுக்கான சேவையினை மாகாணத்தினுள் செயற்படுத்தி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக போக்குவரத்து வசதியினை வழங்குதல்.

· கிராம மற்றும் கடினமான பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களுக்கு  போக்குவரத்து வசதி வழங்குவதற்காக அரசினால் ஒதுக்கீடு பெற்றுக் கொண்டு கெமிசெரிய போக்குவரத்து சேவையினை  நடைமுறைப்படுத்தல்.

· தனியார் பயணிகள் போக்குவரத்து பேரூந்து மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் பேரூந்துகளுக்கிடையே ஏற்படுகின்ற தேவையற்ற போட்டி நிலையினை அகற்றி பயணிகளுக்கு பாதுகாப்பான சிறந்த சேவையினை  வழங்குவதற்காக ஒருங்கிணைந்த நேரசூசியினை செயற்படுத்தல்.

· தனியார் பேரூந்துகளில் பயணிக்கும் போது ஏற்படுகின்ற பிரச்சினைகள் மற்றும்  சவால்களை தேடிப்பார்த்து உடனடியாக செயல்பட்டு அதற்கான தீர்வை பெற்றுக் கொடுப்பதற்காக விசாரணை பிரிவினை செயற்படுத்தல்.

· பேரூந்து உரிமையாளர்களின் வசதிக்காக அலுவலக நடவடிக்கைகளை விரிவுப்படுத்தல் மற்றும் பேரூந்து உரிமையாளர்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்காக நடமாடும் சேவையினை நடாத்துதல்.

· எல்லா மாகாண சபைகளுக்கிடையே முதலாவது சாரதி பயிற்சி பாடசாலையினை வடமேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் ஆரம்பித்து சட்டத்தை மதிக்கின்ற மற்றும் பகுத்தறிவுள்ள சாரதிகளை உருவாக்குவதற்காக சிரேஷ்ட ஆலோசக குழுவினை ஈடுபடுத்தி உயர் தரத்தில் பயிற்சியினை வழங்குகின்ற  தரத்திலான பயிற்சி பாடசாலையினை நிறுவப்பட்டுள்ளதுடன் பயிற்சியி பூர்த்தியடைந்த பின்பு சர்வதேச தரத்திலான சான்றிதழ் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

 

Copyright © <2016 April> Information and Communication Technology Unit - Chief Secretariat - North Western Province