தேசிய வீதி அமைப்பிற்கு ஒழுங்குமுறையாக தொடர்புபடுத்துகின்றதும், கிராமிய வீதி பிணைப்புடன் திறம்பட செயற்படுமாறும், மாகாண வீதி அமைப்பினை உருவாக்குவது மற்றும் மேம்படுத்தி உயர் தரமான மாகாண வீதி அமைப்பினை உருவாக்குதல் மற்றும் பராமரித்து கொண்டு நடாத்தல் என்பவற்றிற்காக தேவையான பொறியியல் துறை மற்றும் ஆலோசனை சேவை வழங்குதல் இத் திணைக்களத்தின் பிரதான நோக்கமாகும்.

 

மாகாண வீதிகளின் பரப்பளவு

மாகாண வீதிகளின் அமைப்பு கிலோ மீற்றர் 2246 தூரங்களை கொண்டதுடன், அதில் கி.மீ. 1551 நீளமுடைய வீதிகள் 253 குருணாகல் மாவட்டத்திலும், கி.மீ. 695 நீளங்களையுடைய வீதி 157 புத்தளம் மாவட்டத்தினுள் அமைக்கப்பட்டுள்ளது.

மாகாண அமைச்சுக் குழுவின் அனுமதியுடன் கிலோ மீற்றர் 505 நீளங்களை கொண்ட பிரதேச சபை வீதிகள் 166 மாகாண சபைக்கு 2013 ஆம் ஆண்டு கையேற்கப்பட்டது.  அதன்படி தற்போது மொத்த மாகாண வீதி அமைப்புக்கள் கிலோ மீற்றர் 2751 ஆகும்.  அது கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு நிறைவேற்று பொறியியலாளர் பிரிவினுள் அமைந்துள்ளது.

 

மாவட்டம்

நிறைவேற்று பொறியியலாளர் பிரிவு

தூரம் (கி.மீ)

மாவட்ட கூட்டுத் தொகை (கி.மீ.)

குருணாகல்

குருணாகல்

466.26

 

1737.98

குளியாப்பிடிய

512.38

மஹவ

447.67

வாரியபொல

311.67

புத்தளம்

சிலாபம்

546.03

1013.06

ஆணமடுவ

466.03

கூட்டுத் தொகை

2751.04